விஜய்யுடன் இணைந்த சமந்தா!

Unexpected Change in Vijay-Murugadoss Project

செய்திகள் 4-Feb-2014 10:57 AM IST VRC கருத்துக்கள்

’துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு நேற்று (3-1-14) கொல்கத்தா காளிகட் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை ‘லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜ்ய – சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ’விஸ்வரூபம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற லால்குடி இளையராஜா இந்தப் படத்தில் கலை இயக்குனராக பணியாற்ற அனல் அரசு சண்டை பயிற்சி அளிக்கிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணந்த ’துப்பாகி’ ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு ட்ரீட் ஆக அமைந்ததால் இவர்கள் மீண்டும் இணைந்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;