‘நான் ஈ’யை மிஞ்சும் ‘பாஹுபலி’

‘நான் ஈ’யை மிஞ்சும் ‘பாஹுபலி’

செய்திகள் 4-Feb-2014 10:16 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சாதனையைச் செய்து வரும் தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது, தான் இயக்கிக் கொண்டிருக்கும் ‘பாஹுபலி’ படத்தில் தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடிக்கிறார். ‘ஈகா’ (தமிழில் ‘நான் ஈ’) படத்திற்காக கிட்டத்தட்ட 2234 விஷுவல் எஃபெக்ட்ஸ் ஷாட்களை வைத்த ராஜமௌலி, பாஹுபலி படத்தில் அதையும் மிஞ்சும் வகையில் 4500க்கும் மேற்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் ஷாட்களை படத்தில் பயன்படுத்துகிறாராம்.

ராஜமௌலியின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை ஆர்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, சத்யராஜ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;