’கோச்சடையான்’ ரிலீஸ் தேதி ரெடி!

’கோச்சடையான்’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 3-Feb-2014 6:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனா, தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சரத்குமார், நாசர், ஆதி முதலானோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். பல புதிய தொழில்நுட்பத்தில், அதிக பொருட் செலவில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘எந்திரன்’ படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;