தனுஷ் படத்தில் சிவகார்த்திகேயன்!

தனுஷ் படத்தில் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 3-Feb-2014 5:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷ், அமலா பால் ஜோடியாக நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்க, அனிருத் இசை அமைக்கிறார். தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் சிவகார்த்திகேயன், இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரும் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடனம் ஆடியதற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் ஏதும் வாங்கவில்லையாம்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்தை தயாரித்தவர் தனுஷ்! இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த நன்றி கடனுக்காகவே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சம்பளம் வாங்காமல் சிவகார்த்திகேயன் நடனம் ஆடியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற்றது. இவர்கள் மூன்று பேரும் பட்டையை கிளப்பும் விதமாக ஆடியிருக்கும் இப்பாடல் காட்சி படத்தில் ஹைலைட்டாக அமையும் என்கிறார் படத்தின் இயக்குனர் வேல்ராஜ்! வருகி ற 14-ஆம் தேதி, காதலர் தினத்தன்று இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;