'இலவசமாக பாடல் எழுதுவேன்' - சினேகன்!

'இலவசமாக பாடல் எழுதுவேன்' - சினேகன்!

செய்திகள் 3-Feb-2014 4:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'புன்னகை பூ' கீதாவின் எஸ்.ஜி. ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெடுடன் முக்தா சீனிவாசன் மகன் முக்தா.ஆர்.கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் 'சிவப்பு'. இப்படத்தினை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் சினேகன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தின் கதையை குறித்து பேசிய கவிஞர் சினேகன் சமீபத்தில் என் மனதை மிகவும் பாதித்த கதைகளில் இப்படத்தின் கதையும் ஒன்று! இனி இதுமாதிரி கதையம்சம் உள்ள படங்களுக்கு இலவசமாக பாடல்கள் எழுதிக் கொடுக்க தயார் என்றார். படம் முடிவடையும் நிலையில் உள்ள இப்படத்தின் டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனங்கள் பற்றி பரபரப்பாக பேசி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இசை டிரைலர்


;