சமுத்திரகனியுடன் மீண்டும் அமலா பால்?

சமுத்திரகனியுடன் மீண்டும் அமலா பால்?

செய்திகள் 3-Feb-2014 4:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

டிவி சீரியல் இயக்குனர், பெரிய திரை இயக்குனர், நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சமுத்திரகனி! இவர் தற்போது இயக்கியுள்ள படம் ’நிமிர்ந்து நில்’. ‘ஜெயம்’ ரவி, அமலா பால் ஜோடியாக நடித்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சமுத்திரக்கனி ஒரு திகில் படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் புரொமோஷன் பெறவிருக்கிறார்! இந்த திகில் படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். சமுத்திரகனியின் இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் அமலா பாலுக்கு சமுத்திரகனி உருவாக்கியிருக்கும் திகில் கதை ரொம்பவும் பிடித்துவிட்டதாம். இதனால் இந்த கதையில் நடிக்க அமலா பால் ஆர்வம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த திகில் கதையை இயக்கும் பொறுப்பை ஒரு அறிமுக இயக்குனரிடம் வழங்க இருக்கிறாராம் சமுத்திரகனி! ஆனால் இன்னும் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கான பெயர், படத்திற்கான ஹீரோ யார் என்பதை சமுத்திரகனி இன்னும் முடிவு செய்யவில்லை. அதன் அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;