இமான் இசையில் ‘சூப்பர் சிங்கர்’ திவாகர்!

இமான் இசையில் ‘சூப்பர் சிங்கர்’ திவாகர்!

செய்திகள் 3-Feb-2014 3:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் டிவியின் ’ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் முதல் இடத்தைப் பிடித்தவர் திவாகர்! ஏழை குடும்பத்தைச் சேர்ந்த திவாகரின் பின்னணி சக போட்டியாளர்களையும், நிகழ்ச்சியின் நடுவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது! இதுவரையில் யாரிடமும் இசையில் பயிற்சி பெற்றதில்லை திவாகர்! இருந்தாலும் சிறப்பாக பாடும் இவரது திறமையைக் கண்டு எல்லோரும் வியந்துள்ளனர்!

இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் திவாகர் பாடிய, ‘ஹம்ம ஹம்ம…’ பாடலும், ‘மாமா மாப்பிள்ளை…’ பாடலும் ரசிகர்களின் பெரிய அப்ளாஸ் பெற்றதோடு, இவருக்கு 7 லட்சம் ஓட்டும் பெற்று, முடல் இடத்தைப் பிடித்துள்ளார்! இவருக்கு முதல் பரிசாக 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்று கிடைக்க, அவரை தங்களது இசையில் பாட வைக்கவும் சில சினிமா முன்னணி இசை அமைப்பாளர்கள் முன் வந்துள்ளனர். அவர்களில் முதலாமவர் டி. இமான்! இவர் ஒரு மாதத்துக்கு முன்னாடியே திவாகரின் வாய்ஸ் டெஸ்ட் நடத்தி அவரை ஒரு படத்தில் பாட வைக்க முடிவு செய்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;