பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்!

செய்திகள் 3-Feb-2014 2:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹாலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்தவர் ஃபிலிப் சேமோர் ஹாஃப்மேன். இவர், ’சென்ட் ஆஃப் வுமன்’, ‘டுவிஸ்டர்’, ‘பூகி நைட்ஸ்’, ‘ரெட் டிராகன்’ என பல படங்களில் நடித்துள்ளதோடு ஒரு சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். 2005-ல் ‘கோபோடே’ என்ற படத்தில் நாயகனாக நடித்த இவருக்கு ஆஸ்கர் விருது உடபட பல விருதுகள் கிடைத்துள்ளது. இப்படி சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் ஹாலிவுட்டில் வெற்றி வலம் வந்த ஹாஃப்மேன் நேற்று தனது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்! அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மர்மமாக உள்ளது.

ஹாஃப்மேனின் மரணம் ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹாஃப்மேன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, அதை வெளிப்படையாக அறிவித்தவர். அந்தப் பழக்கத்திலிருந்து விடுப்பட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெற்றார். ஆனால் போதை பழக்கத்திலிருந்து விடுபட்ட மாதிரி அவர் வெளியில் காட்டிக் கொண்டாரே தவிர உண்மையில் அவர் போதை பழக்கத்திலிருந்து விடுபடவில்லையாம். தொடர்ந்து அதிகமான போதை பழக்கத்துக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை தொலைத்தவர் ஹாஃப்மேன் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;