சிம்பு-ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணமா?

சிம்பு-ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணமா?

செய்திகள் 3-Feb-2014 1:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்றிரவு 12 மணிக்கு நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சிம்பு. இதில் ‘ஹைலைட்’டான விஷயம் என்னவென்றால், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஹன்சிகாவும் உடன் இருந்தாராம். தங்களது காதலை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்த சிம்புவும், ஹன்சிகாவும் இடையில் கொஞ்ச நாட்களாக இதைப்பற்றி எதுவும் மீடியாக்களில் வாய் திறக்காமல் இருந்தனர்.

அதேபோல் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் சண்டை எனவும் ஒரு புறம் கிசுகிசுக்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாத சிம்பு, சமீபத்தில் ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு கேக் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார். தற்போது, சிம்புவின் பிறந்தநாளில் ஹன்சிகாவும் உடன் இருந்ததால் காதலில் எந்தவித பிரிவும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இதனால், சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு திருமணம் முடித்த கையோடு தங்களின் கல்யாணத்தைப் பற்றியும் சிம்பு - ஹன்சிகா அறிவிப்பார்கள் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;