மீண்டும் ஒரு ‘கரகாட்டக்காரன்’!

மீண்டும் ஒரு ‘கரகாட்டக்காரன்’!

செய்திகள் 3-Feb-2014 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாலா. இதுவரை வெறும் 6 படங்கள் மட்டுமே கொடுத்துள்ள இவர் இந்திய இயக்குனர்களின் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளவர். ‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களில் இளையராஜாவுடனும், ‘நந்தா’, ‘அவன் இவன்’ படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவுடனும், ‘பரதேசி’ படத்தில் ஜி.வி.பிராகஷுடனும் பணிபுரிந்துள்ளார்.

இப்போது இவர் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் சசிகுமாரை நாயகனாக்கி உள்ளார். கரகாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்திற்கான 12 பாடல்களை 6 நாட்களில் போட்டுள்ளார் இசைஞானி. இந்த 12 பாடல்களையும் 12 புதுமுக பாடகர்களை வைத்து பாட வைத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் மேலும் பல பாடல்கள் இப்படத்தில் இடம் பெற உள்ளதாம். இசைஞானியின் ரசிகர்களுக்கு இது பெரிய ட்ரீட்டாக இருக்கவேண்டும் என்பதில் அதிக முனைப்போடு செயல்பட்டு வருகிறதாம் பாலாவின் படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;