இயக்குனருக்கு இன்னோவா கொடுத்த உதயநிதி!

Director gets innova from Udhayanidhi

செய்திகள் 3-Feb-2014 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் நடிக்க எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் 'இது கதிர்வேலன் காதல்'. வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பார்த்தார். படத்தை பார்த்த அனைவரும் உதயநிதியையும், படத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த சந்தோஷத்தில் ‘‘இப்படம் நன்றாக வரக் காரணம் பிரபாகரன் மற்றும் அவரது டீம் தான்’’ என்று சொல்லியவர் இயக்குனர் பிரபாகரனுக்கு ஒரு புத்தம் புதிய இன்னோவா காரை பரிசளித்துள்ளார். ஹாரிஸின் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;