சைபர் க்ரைம்-க்கு மோகன்லால் பாராட்டு!

சைபர் க்ரைம்-க்கு மோகன்லால் பாராட்டு!

செய்திகள் 1-Feb-2014 4:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருசியம்’ மலையாள படத்தின் மாபெரும் வெற்றி தென்னிந்திய சினிமாவையே பேச வைத்துள்ளது! இந்தப் படம் ரிலீசான நாளிலிருந்து இன்று வரை வெற்றிகரமாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், பெரிய அளவில் வசூல் செய்ததற்கும் முக்கிய காரணம் இந்த படத்தின் பைரசி வரவில்லை என்பதுதான்!

சாதாரணமாக தற்போது வெளியாகும் ஒரு திரைப்படத்திற்கு முக்கிய வில்லனாக இருப்பது திருட்டு விசிடி தான்! ‘திருசியம்’ படத்திற்கும் அந்த சோதனை முதலில் வந்தது! ஆனால் சைபர் க்ரைம் போலீசார் அதை தக்க சமயத்தில் கண்டுபிடித்து தேவையான நடவடிக்கைகள் எடுத்ததால் ’பைரசி’யிலிருந்து தப்பித்தது ’திருசியம்’. இதனால் இந்தப் படத்தை பார்க்க வேண்டுமென்றால் மக்கள் தியேட்டருக்கு வந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக, அது படத்தின் பெரிய வசூலுக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது!

இதனையொட்டி ‘திருசியம்’ படத்தில் கதாநாயகனாக நடித்த மோகன்லால் பெருமையுடன் சைபர் க்ரைம் போலீஸாருக்கு வாழ்த்து தெரிவித்தும், அவர்களை பாராட்டியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;