'பஞ்ச்' பேசிய பவர் ஸ்டார்!

 'பஞ்ச்'  பேசிய  பவர் ஸ்டார்!

செய்திகள் 1-Feb-2014 1:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரித்து, எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் படம் 'பாக்கணும் போல இருக்கு'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறின. இசையை அபிராமி ராமநாதன் வெளியிட, நமீதா பெற்றுக்கொண்டார்.

விழாவிற்கு வந்த நடிகைகள் நமீதா, சஞ்சனாசிங், சுஜா வாருணி உட்பட பலர் மஞ்சள் நிறக் கலரில் உடையணிந்து வந்திருந்தனர். பார்வையாளர்கள் மஞ்சள் நிற உடைகுறித்து முணுமுணுப்பதை கேட்டுவிட்டாரோ என்னவோ சுஜா வாருணி பேசும்போது, ‘’என்னடா மாரியாத்தாவிற்கு கூழ் ஊத்த வந்த மாதிரி வந்திருக்காங்களேன்னு பார்க்குறீங்களா? ஒன்னுமில்லை டிரஸ்கோடுன்னு சொன்னாங்க! அதுதான்! தப்பா நினைக்காதீங்க’’ என்றார்.

விழாவில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சனாசிங் தான்! இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் அழகில் வந்திருந்தார். 'சஞ்சனாவை பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு' என்று பலரின் மனது படப்படத்தது.

’பவர் ஸ்டார்’ பேச வந்ததுமே அரங்கம் அதிர விசில் சத்தம், கைத்தட்டல்கள் தான்! அவர் வழக்கம்போல பேசி முடித்து பஞ்ச் வசனம் பேசியது தான் விழாவின் ஹைலைட் ! 'சிலரை பார்த்தவுடன் பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்கதான் பிடிக்கும். ஆனால் இந்த பவர் ஸ்டாரை பார்க்காமலே பிடிக்கும்' என்றவுடன் ஆரவாரம் அடங்க 5 நிமிடங்கள் ஆயிற்று.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;