த்ரிஷா ஏலம் எடுக்க விரும்பும் நடிகர்!

த்ரிஷா ஏலம் எடுக்க விரும்பும் நடிகர்!

செய்திகள் 1-Feb-2014 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மொழி நடிகர்களுக்குள் நடந்துவரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சென்னைக்கும் கர்நாடக அணிகளுக்கும் இடையிலான போட்டி நாளை பெங்களூரு சின்னப்பா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. நடிகர்களுக்கிடையே நடக்கும் இப்போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டியாக இது கருதபடுகிறது.

சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் விஷால் தனது அணியை அறிமுகப்படுத்தி பேசினார்.

சென்னை அணிக்கான விளம்பர தூதுவராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறியவர் நட்சத்திர வீரர்களுக்கு அறிவுரையும் வழங்கினார். விளையாடும்போது தங்களை நடிகர்கள் என்பதை மறந்து விளையாடுகிறீர்கள். விளையாடும்போது கவனம் தேவை. நாம் நடிகர்கள். நம்மை நம்பியிருக்கும் தயாரிப்பாளர்களை நினைவில் கொண்டு காயம் படாமல் பார்த்து விளையாடுமாறு கேட்டுக்கொண்டார்.

சென்னை அணியின் விளம்பரதூதர் த்ரிஷாவிடம், ‘உங்கள் அணியில் உள்ள வீரர்களில் யாரை ஏலம் எடுப்பீர்கள்?’ என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘விக்ராந்த்’ என்றார்! தொடர்ந்து அவரை புகழ்ந்து பேசவும் செய்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;