எஸ்.பி.ஜனநாதனை புகழும் கார்த்திகா!

எஸ்.பி.ஜனநாதனை புகழும் கார்த்திகா!

செய்திகள் 31-Jan-2014 2:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், ‘புறம்போக்கு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு குலுமனாலியில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பது குறித்து படத்தின் கதாநாயகி கார்த்திகா நாயர் கூறும்போது, ‘‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக நடந்தது. இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது.

ஆக்‌ஷன் காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா க்ராப்டை சார்ந்து இருக்கும் . இதை தவிர நான் ஆடியிருக்கும் டேப் டான்ஸ், நான் நடனத்திலும் சோபிக்கக் கூடியவர் என்ற பெயரை பெற்றுத் தரும் . என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்பளித்த இயக்குனர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.

அவர் என் பார்வையில் ஒரு சரித்திர பேராசிரியராக தோன்றுகிறார். அவரது உலக அறிவு அபரிதமானது வியப்புக்குரியது. அவரது இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் ஆகியோருடன் நடிப்பது, ‘யுடிவி மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவன தயாரிப்பில் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கு’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;