இளையராஜா பிறந்த ஊரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

இளையராஜா பிறந்த ஊரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

செய்திகள் 31-Jan-2014 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசைஞானி இளையராஜாவின் வாரிசுகளில் ஒருவவர் கார்த்திக் ராஜா! இவர் பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்றாலும் இவரால் தமிழ் சினிமாவில் சொல்லும்படியான ஒரு இடத்தை இன்னும் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில் லண்டனில் இளையராஜா தலைமையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட, அந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் கார்த்திக் ராஜாவுக்கு பெரும் பங்குண்டு!

லண்டனில் நடந்த அந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து கார்த்திக் ராஜா அடுத்து ‘எப்போதுமே ராஜா’ என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி மதுரையிலும், ஏப்ரல் 19-ஆம் தேதி இளையராஜா பிறந்த ஊரான பண்ணைபுரத்திலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய கூடுதல் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார் கார்த்திக் ராஜா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க அம்மா ராணி - டிரைலர்


;