கமலை இயக்கும் மலையாள இயக்குனர்!

கமலை இயக்கும் மலையாள இயக்குனர்!

செய்திகள் 31-Jan-2014 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ’திருசியம்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்! இந்தப் படத்தை தமிழில் யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி இருந்து வந்தது! இப்போது அதற்கும் விடை கிடைத்து விட்டது! ‘திருசியம்’ படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜித்து ஜோசஃபே தமிழ் ரீ-மேக்கயும் இயக்க இருக்கிறார்.

ஆனால் தமிழ் ரீ-மேக்கில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை! மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் பாலாஜியின் ‘சுரேஷ் புரொடக்‌ஷன்’ நிறுவனமும் ‘வைட் ஆங்கிள்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;