சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பிரபல இசை அமைப்பாளர்!

சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பிரபல இசை அமைப்பாளர்!

செய்திகள் 30-Jan-2014 5:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 200-க்கும் மேறபட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் ‘மரகதமணி’ என்கிற எம்.எம்.கீரவாணி! தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ‘அனாமிகா’, ‘பாஹுபலி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வரும் கீரவாணி 2016-ஆம் ஆண்டு டிசமபர் மாதம் 8-ஆம் தேதி சினிமாவில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டிருக்கிறார்.

இவர் தனது முதல் பாடலை சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி பதிவு செய்துள்ளார். இதனால் ஓய்வு பெறும் தேதியும் டிசம்பர் மாதமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, மேற்குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்துள்ளார்! கீரவாணி, ஓய்வு பெறும் விழாவை ஹைதராபாத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

அன்றைய தினம் தன்னுடன் பணியாற்றிய, நெருக்கமாக இருக்கும் இசை கலைஞர்களை அழைத்து பெருமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்தத் தகவல்களை கீரவாணி தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;