சந்தோஷ் சிவனுக்கு விருந்து அளித்த சூர்யா!

சந்தோஷ் சிவனுக்கு விருந்து அளித்த சூர்யா!

செய்திகள் 30-Jan-2014 4:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மும்பையில் ’அஞ்சான்’ படப்பிடிப்பு நடக்கும்போது தான் மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்தது. சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த தகவல் அறிந்ததும், சூர்யா அவருக்கு விருந்து வைக்க விரும்பியுள்ளார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்த சூர்யா, சந்தோஷ் சிவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக விருந்துக்கு அழைக்கப்பட்ட மற்றவர்களிடம் இந்த விருந்து குறித்து சந்தோஷ் சிவனிடம் எதுவும் கூறக்கூடாது என்று அன்பு கட்டளை இட்டிருக்கிறார்.

சூர்யா அழைத்த இடத்துக்கு சந்தோஷ் சிவன் வந்ததும் அவருக்கு சர்ப்ரைஸ் காத்திருந்தது! இந்த விருந்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், அனிருத், மாதவன், பிரபுதேவா என பல பிரபலங்கள் கலந்துகொண்டு சந்தோஷ் சிவனுக்கு வாழ்த்துச் சொல்ல நெகிழ்ந்து போனாராம சந்தோஷ் சிவன். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சந்தோஷ் சிவன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;