வின் டீசல் நடிக்கும் 'XXX 3'

வின் டீசல் நடிக்கும் 'XXX 3'

செய்திகள் 30-Jan-2014 3:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ட்ரிபிள் எக்ஸ்' (XXX), ’ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ்’ சீரிஸ் படங்கள் மற்றும் பல படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் வின் டீசல். தற்போது ‘ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ்’ படத்தின் 7-ஆம் பாகத்தில் நடித்து வரும் வின் டீசல் அடுத்து ‘ட்ரிபிள் எக்ஸ்’ படத்தின் 3-ஆம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். ’ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரிஸ் 7’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வந்தாலும் இப்படத்தை 2015-ல் வெளியிட தான் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் நிறைய கால அவகாசம் கிடைத்திருப்பதால் ‘ட்ரிபிள் எக்ஸ்’ படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் வின் டீசல்!

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் அடுத்த மாதம் முடிவடைந்துவிடுமாம்! இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஆர்மபமாகவுள்ளது. இவர் நடிப்பில் வெளியான ‘ட்ரிபிள் எக்ஸ்’ முதல் பாகம் உலகம் முழுக்க வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதற்கு அடுத்து வந்த இரண்டாம் பாகத்தில் வின் டீசல் நடிக்கவில்லை. இதில் ஐஸ் க்யூப் என்பவர் நடித்தார். இருந்தாலும் இந்தப் படமும் நல்ல வசூலை குவித்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;