வைரமுத்துவுக்கு பிடித்த யுவன் பாடல்கள்!

வைரமுத்துவுக்கு பிடித்த யுவன் பாடல்கள்!

செய்திகள் 30-Jan-2014 1:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தில் கவிஞர் வைரமுத்துவும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் இணையும் முதல் படம் ’இடம் பொருள் ஏவல்’ என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்! இந்நிலையில், யுவன் இசை அமைத்த பாடல்களில் ’நந்தா’ படத்தில் வரும் ‘முன்பனியா… முதல் மழையா…’ பாடலும், சமீபத்தில் திரைக்கு வந்த, ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடலும் தான் தனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்கள் என்று கூறியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து!

இளையராஜா இசையில் வைரமுத்து பாடல் எழுதி 28 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இளையராஜாவின் வாரிசான யுவனின் இசையில் வைரமுத்து பாடல் எழுதுவது மகிழ்ச்சியை தரும் விஷயமாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;