பாண்டிராஜ் படத்துக்கு பாக்யராஜ் டைட்டில்!

பாண்டிராஜ் படத்துக்கு பாக்யராஜ் டைட்டில்!

செய்திகள் 30-Jan-2014 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்திற்காக பாண்டிராஜ் முதலில் ‘கதவை திற காதல் வரட்டும்’, ‘லவ்வுனா லவ்வு… அப்படி ஒரு லவ்வு’ என இரண்டு தலைப்பை யோசித்து வைத்திருந்தாராம்.

ஆனால் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆனதும் இதைவிட நல்ல தலைப்பாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார் பாண்டிராஜ். படத்தில் நயன்தாராவை சிம்பு ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ‘இது நம்ம ஆளு’னு ஃபீல் பண்ற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கிறதாம்.

அதனால் படத்துக்கு ‘இது நம்ம ஆளு’ என்றே டைட்டில் வைக்கலாம் என பாண்டிராஜ் முடிவு செய்திருக்கிறாராம். ஏற்கெனவே இந்த டைட்டிலில் பாக்யராஜ் ஒரு படத்தை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம - டிரைலர்


;