விரைவில் ‘சொகுசு பேருந்து’!

விரைவில் ‘சொகுசு பேருந்து’!

செய்திகள் 30-Jan-2014 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மண்ணின் மனத்தையும் மனித உறவுகளையும் சேர்த்து உணர்வுப்பூர்வமாக கதை சொல்லும் இயக்குனர்களில் ஒருவர் ராசு மதுரவன். அதிலும் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து வெற்றியைக் கொடுக்கும் இயக்குனர்களின் வரிசையில் உள்ளவர். ‘பாண்டியநாடு தியேட்டர்ஸ்’ சார்பில் ராசு மதுரவன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘சொகுசு பேருந்து’. பஸ்ஸுக்குள் பிரயாணிக்கும் காதல் ஜோடி மற்றும் பலதரப்பட்ட மனிதர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகியுள்ளது இப்படம். சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டின் போது திரையிடப்பட்ட டிரைலரும் பாடல் காட்சிகளும் குறிப்பாக ‘ஆசை வச்சேன்...’ என்ற டூயட் பாடலும், நிக்கோல் குத்தாட்டம் போட்டிருந்த குத்து பாடலும் பலத்த கைதட்டல்களைப் பெற்றது. விரைவில் இந்த ‘சொகுசு பேருந்து’ தியேட்டர்களில் வலம் வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;