‘தாவூத்’திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு!

‘தாவூத்’திற்கு ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு!

செய்திகள் 30-Jan-2014 10:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த வருடம் ஜூலை மாதம் ஹிந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பிற்குள்ளான படம் ‘டி-டே’. இப்படத்தை நிகில் அத்வானி இயக்க அர்ஜுன் ராம்பால், ரிஷிகபூர், இர்ஃபான் கான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ருதிஹாசன் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக துணிச்சலுடன் நடித்திருந்தார். ஹிந்தியில் உருவான இந்தப் படத்தை தற்போது தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிட ஹிந்தியில் தயாரித்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை ஸ்ருதிஹாசன் கடுமையாக எதிர்த்துள்ளார். தமிழில் டப் செய்யப்படுவதற்கு தன்னிடம் சம்மதம் வாங்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஒப்பந்தத்தை மீறிய செயலாகக் கருதி அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளார். ‘தாவூத்’ வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்று சில விளம்பரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;