‘ஒரு மோதல் ஒரு காதல்’

 ‘ஒரு மோதல் ஒரு காதல்’

செய்திகள் 29-Jan-2014 5:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

புதிய கதைக்களங்களுடன் வித்தியாசமான திரைக்கதை அமைப்புடன் ரசிகர்களை பிரமிக்கசெய்து வருபவர்கள் புதிய இளம் இயக்குனர்கள் தான்! அந்த வரிசையில் விரைவில் சேர்ந்து கொள்ளவிருக்கிறார் கீர்த்திகுமார். இவர் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே படமாக்க துணிந்துள்ளார்.

படத்தின் பெயர் 'ஒரு மோதல் ஒரு காதல்'. பஞ்சாபி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இவரின் திருமண வாழ்க்கைக்கு முன் இரண்டு பெண்கள் வருகிறார்கள். ஒருவருடன் காதலிலும் மற்றொருவருடன் மோதலிலும் முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியத்துடன் சொல்லியுள்ளேன் என்கிறார் இயக்குனர்.

புதிய இளைஞர்கள் பட்டாளத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு நகைச்சுவையாக, இளமை ததும்பும் இளைய தலைமுறையினருக்கே உள்ள குறும்புடன் கதை சொல்லியிருக்கிறாராம்! இன்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த 'ஒரு மோதல் ஒரு காதல்' இசை வெளியீட்டின்போது திரையிடபட்ட பாடல் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அத்துடன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;