பரதனுக்கு அஜித் பாராட்டு!

பரதனுக்கு அஜித் பாராட்டு!

செய்திகள் 29-Jan-2014 4:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'வீரம்'. கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் மிகச் சில படங்களின் வரிசையில் சமீபத்திய வரவு இது.

விக்ரம் நடித்த 'தில்', 'தூள்' விஜய் நடித்த 'கில்லி', 'மதுர' படங்களின் வசனகர்த்தா பரதனை 'கில்லி' படப்பிடிப்பின்போது அவரது வசனங்கள் மற்றும் அவரது உழைப்பை பார்த்து விஜயே அழைத்து 'அழகிய தமிழ் மகன்' படத்தின் மூலம் இயக்குனர் ஆக்கினார் என்பதை நன்றியுடன் கூறுகிறார்.

‘‘சில நல்ல விஷயங்களை விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோ மூலமாக சொல்லும்போது அது நூறு சதவீதம் மக்களுக்கு போய்ச் சேரும். எனக்கு ‘வீரம்’ கதையில் நிறைய இடங்கள் அப்படி எழுதும் வகையில் அமைந்திருந்ததும் அதை பவர் ஃபுல்லாக பேசியும், நடித்தும் மெருகேற்றிய அஜித் சார் அவர்களுமே இந்த வெற்றிக்கு காரணம்.

அந்த விநாயகம் கதாபாத்திரத்தில் அஜித் சார் அவர்களை பொருத்தி கண்களை மூடியபடி யோசித்தபோது என் பேனாவிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகள் என்னையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வசனகர்த்தாவுக்கு இன்று வாழ்த்துக்கள் குவிய காரணகர்த்தா அஜித் சார் தான். ஆல்பிரட் ஹிட்காக் அவர்களிடம் ஒரு முறை நீங்கள் இயக்கும் படங்களை பார்த்து ரசிகர்கள் பயந்து அலறுவதை அரங்கில் சென்று பார்த்த அனுபவம் உண்டா? என கேட்டபோது அதற்கு அவர் இல்லை என்று பதில் கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, ‘நான் தான் காட்சிகளை படமாக்கும்போதே அதை அனுபவித்து விடுகிறேனே’ என்றார். ஓர் நிஜமான படைப்பாளிக்கு அந்த தீர்க்க தரிசனம் வேண்டும்’’ என்கிறார் பரதன்.

இவர் தற்போது இயக்கி வரும் ‘அதிதி’ படம் முடியும் தருவாயில் உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - டிரைலர்


;