நந்தாவுக்கு கொலை மிரட்டல்!

  நந்தாவுக்கு கொலை மிரட்டல்!

செய்திகள் 29-Jan-2014 3:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்பெல் பௌன்ட் ஃபிலிம்ஸ் I N C’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ‘அதிதி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நந்தா நடிக்கிறார். அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் நிகேஷ்ராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வதிவர்ஷா நடிக்கிறார். திரைக்கதை , வசனம் எழுதி பரதன் இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்திற்காக பரபரப்பான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. நந்தாவை மிரட்டி காரில் கடத்திய நிகேஷ்ராம் ஒரு பாழடைந்த வீட்டின் முன் காரை நிறுத்துகிறான். நந்தா கையில் துப்பாக்கியை கொடுத்து உள்ளே போய் அவனை கொன்று வா! இல்லைன்னா உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். மறுக்கிறார் நந்தா! இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை வந்து விடுகிறது. நந்தாவை கடத்துவது ஏன்? கொலை செய்யத் தூண்டுவது ஏன்? பரபரப்பாக படமாக்கப்பட்ட இந்த இரவுக் காட்சி விரைவில் வெளிவர் உள்ள ‘அதிதி’ திரைப்படம் விளக்கும்.

இந்தப் படத்திற்கு ஜெய் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;