தீர்க்கதரிசி நாகேஸ்வர ராவ்!

 தீர்க்கதரிசி நாகேஸ்வர ராவ்!

செய்திகள் 29-Jan-2014 3:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவில் ஜாம்பவானாக விளங்கியவர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்! இவர் சமீபத்தில் காலமானார்! இவர் கடைசியாக நடித்த படம் ‘மனம்’. இந்தப் படத்தில் நாகேஸ்வர ராவுடன் அவரது மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்! கதாநாயகியாக சமந்தா நடிக்க, படத்தை விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் வேளையில்தான் நாகேஸ்வர ராவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்!

நாளுக்கு நாள் தனது உடல் நிலை மிகவும் மோசமாகி போவதை கண்ட நாகேஸ்வர ராவ் படம் சம்பந்தப்பட்டவர்களிடம், ‘‘டப்பிங் சம்பந்தமான கருவிகளை கொண்டு வந்து என் காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள்! இல்லையென்றால் மிமிக்ரி கலைஞர்களை வைத்து டப்பிங் வேலைகளை செய்து முடிக்க வேண்டி இருக்கும்’’ என்று உருக்கமாக கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அவரது விருப்பபடி படத்திற்கு அவரே டப்பிங் பேசி, தன்னோட வேலையை முடித்து கொடுத்துள்ளார்!

நடிகர் நாகார்ஜுனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கட்டுரையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;