‘இந்தியன் தாத்தா’ கெட்-அப்பில் விக்ரம்!

‘இந்தியன் தாத்தா’ கெட்-அப்பில் விக்ரம்!

செய்திகள் 29-Jan-2014 12:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கம்! பல ‘ஸ்பெஷல்’ விஷயங்களுடன் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கும் ‘ஐ’ படத்திற்காக பிரம்மாண்ட குட்ஸ் டிரெயின் மற்றும் ஆஸ்பத்திரி செட்டை போட்டு சமீபத்தில் அதில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் ஷங்கர்! இந்தப் படத்தில் விக்ரம் ஏற்று நடிக்கும் கேரக்டரை மிக ரகசியமாக வைத்திருக்கிறார்கள்! இருந்தாலும் விக்ரம் கேரக்டர் பற்றி பல செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன! சமீபத்தில் இந்த செட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க வந்த விக்ரம் கேரவேனிலிருந்து வெளியே வரும்போது ‘அந்நியன்’ படத்தில் வரும் ’பர்தா கெட்-அப்’பில் இருந்திருக்கிறார்! கேமராவுக்கு முன்னாடி சென்றவர் அந்த பர்தா கெட்-அப்பை கழற்றிவிட, ’இந்தியன்’ தாத்தா கெட்-அப்பில் இருந்திருக்கிறார்! ஆக, ‘ஐ’ படத்தில் பலவிதமான கேரக்டர்களில் விக்ரம் வருகிறார் போலும்! பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;