சினிமாவிலிருந்து விலகும் கவர்ச்சி நடிகை!

சினிமாவிலிருந்து விலகும் கவர்ச்சி நடிகை!

செய்திகள் 29-Jan-2014 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏராளமான ஹிந்திப் படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தவர் வீணா மாலிக். கவர்ச்சி வேடங்களில் நடித்தும், பத்திரிகைகளுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகழ்பெற்ற இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்! சமீப காலங்களில் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட இவர் இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடிக்க மாட்டாராம்! இனி மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், சமூக சேவை தொடர்பான விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவாராம்! சமீபத்தில் நடிக்க கமிட் ஆன படங்களிலிருந்து கூட விலக தீர்மானித்துள்ளார் வீணா மாலிக்!

வீணாவின் இந்த முடிவுக்கு காரணம், அவர் சமீபத்தில் சந்தித்த இஸ்லாம் மத தலைவர் மௌலானா தாரீக் என்பவர் தானாம்! சமீபத்தில் தன் கணவரும், பாடகருமான ஆசாத் பஷீர் உடன் புனித பயணமாக மெக்கா வந்த வீணா மாலிக் இது குறித்து கூறும்போது, ‘‘பலரைப் போல நானும் வாழ்க்கையில் பல தவறுகளை செய்திருக்கிறேன். இதற்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்டேன். அப்படியிருக்கும்போது தான் இஸ்லாம் மத தலைவரான மௌலானா தாரீக் அவர்களை சந்தித்தேன். அவர் என் வாழ்க்கை முறைகளை அப்படியே மாற்றிவிட்டார்! இனி ஒருபோதும் பர்தா அணியாமல் வெளியே வரமாட்டேன். இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வேறு, இனி வாழப் போகும் வாழ்க்கை வேறு’’ என்று கூறியிருக்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;