டைரக்டர்களுக்கு அமீர் புத்திமதி.!

டைரக்டர்களுக்கு அமீர் புத்திமதி.!

செய்திகள் 29-Jan-2014 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மதுவும், மாதுவும் சினிமாக்காரர்களுக்கு அழகு என்று சொன்னது போய் இன்று அடிஷனலாக ’பான் பராக்’கும் அந்த பழமொழியில் சேர்ந்து இருக்கிறது.மறைந்த டைரக்டர் ராசு மதுரவனின் ‘சொகுசு பேருந்து’ படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சேரன், அமீர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் பகிரங்கமாகவே போதை பாக்கு மேட்டரை போட்டு தள்ளிவிட்டார்கள். ராசுமதுரவனின் அகால மரணம் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அபாய எச்சரிக்கை என்பதை டிக்ளேர் பண்ணி விட்டார்கள்.

படத்தின் டைரக்டர் இல்லாமல் நடந்த முதல் இசை வெளியீட்டு விழா ‘சொகுசு பேருந்து’ விழாவாகத்தான் இருக்கும். ராசுமதுரவனுக்கு பான் பராக் போடும் பழக்கம் இருந்தது. அதுவே அவரது மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது.

‘‘கடன்களை மனைவி, குழந்தைகள் தோளில் சுமத்திவிட்டுப் போயிருக்கிறார். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. என்னிடம் அவர் சொல்லியிருக்கிற கதையை நானே தயாரித்து நடித்து உதவி செய்யப் போகிறேன். அதற்கு முன்னதாக எனது ’ஜே.கே எனும் நண்பனின் கதை’யின் சென்னை நகர முதல் நாள் வசூலை அவரின் குடும்பத்துக்கு வழங்குவேன்’’என்றார் டைரக்டர் சேரன்.

அடுத்துப் பேசிய பெப்சி சங்கத் தலைவர் அமீர், பகிரங்கமாகவே உண்மையை உடைத்துப் பேசினார்.

‘‘இப்போ நான் பேசப் போறதை கேட்டு யார் கோபப்பட்டாலும் பரவாயில்லை. நான் பேசிதான் ஆகணும். நோயை நாமே தேடி செல்லக் கூடாது. அது கேவலமானது. ராசு மதுரவன் நிறைய பாக்கு போடுவார். அதனால் ஏற்பட்டது தான் மரணம் என்று எனக்கு சொன்ன உதவி இயக்குனர்களே தண்னி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தீய பழக்கத்தினால் சுருளிராஜன், ரகுவரன், பத்திரிகையாளர்கள் இறந்து இருக்கிறார்கள். தீய பழக்கத்தை ஏத்திக்கொண்டு இறக்கிறார்கள். ராசுமதுரவன் செய்தது அவரது குடும்பத்தை கடனில் நிறுத்தி இருக்கிறது. சினிமாக்காரர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் நல்ல டைரக்டராக, நடிகனாக வீட்டுக்கு போ! குடிகாரனாக போகாதே, போதைப் பழக்கத்தை விடு. பாக்கு போடாதே, குடிக்காதே’’ என்று கடுமையாக எச்சரித்தார்.

கடைசியாக பேசிய சீமான், ‘‘ராசு மதுரவனுக்கு போதைப் பாக்கு போடும் பழக்கம் சண்டைக் கலைஞர்களிடம் இருந்து வந்துவிட்டது. ராம்போ ராஜ்குமார் கழுத்தை சுற்றி பாக்கு பொட்டலங்களை சரமாக போட்டுக் கொள்வார். அந்த பழக்கம்தான் வாயில் போட்டபடியே தூங்கும் பழக்கத்தை ராசு மதுரவனுக்கு ஏற்படுத்திவிட்டது. அந்த பாக்கு போட்டால்தான் கழிவறைக்கு செல்லும் நிலை வந்திருக்கிறது. அதை அவர் சொல்லவே இல்லை” என வருத்தப்பட்டார்.

தயாரிப்பாளர்கள் சங்க பிரமுகர் கே.ராஜன் பேசினால் வில்லங்கம் வீதியில் கைவிரித்து காத்திருக்கும் என்பார்கள்! இந்த விழாவிலும் அப்படிதான்! ‘‘ஒரு நடிகன் நடிகையின் உதட்டை கடித்து இழுத்த காயம் இன்னும் ஆறவில்லை’’ என்று மறைமுகமாக பேசிவிட்டு சென்றார். மேலும் ராசு மதுரவனின் குழந்தைகளுக்கான கல்லூரி படிப்புவரை ஆகும் செலவை ஏற்றுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;