விபத்தில் சிக்கிய குஷ்பு!

விபத்தில் சிக்கிய குஷ்பு!

செய்திகள் 28-Jan-2014 3:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை குஷ்பு நேற்று காரில் பயணம் செய்யும்போது ஒரு சிக்னலில் பச்சை நிற சிக்னலுக்காக காத்திருந்தார். அப்போது குஷ்புவின் காருக்கு பின்னால் வேகமாக வந்த ஒரு மாநகரப் பேருந்து ‘டமால்’ என்று குஷ்புவின் கார் மீது வந்து மோதியது! இதில் குஷ்புவின் காரின் பின்பக்க விளக்குகள், டிம்பர் போன்றவை பெரும் சேதமடைந்தன! உடனே காரில் இருந்து இறங்கிய குஷ்பு அந்த பேருந்தின் ஓட்டுனரை சில வார்த்தைகள் கூறி கண்டித்து, பிறகு அவரை மன்னித்து விட்டிருக்கிறார். இந்த சமபவம் குறித்து குஷ்பு டுவீட் செய்துள்ள குறிப்பில், ‘‘வாவ் என்ன ஒரு இடி! எம்.டி.சி.பஸ் வந்து என் காரை மோதியது! காரின் பின்பக்கம் நிறைய அடிப்பட்டது! டிரைவரை மன்னித்து விட்டேன்!’’ என்று பொருள்படும் படி குறிப்பிட்டிருக்கிறார்.

மாநகரப் பேருந்து வந்து மோதிய குஷ்புவின் கார் அவரது கணவர் சுந்தர்.சி. பரிசளித்த ‘ஆடிQ5’ ரக கார் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;