டப்பிங் படங்களுக்கு எதிர்ப்பு!

டப்பிங் படங்களுக்கு எதிர்ப்பு!

செய்திகள் 28-Jan-2014 12:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒவ்வொரு மாநிலத்திலும் பிறமொழிப் படங்களை அந்த மாநில மொழியில் டப்பிங் செய்தும் நேரடியாகவும் வெளியிடுவது வழக்கம்! நேரடியாக வெளியிடப்படும் மற்ற மொழிப் படங்களை விட அந்த மாநில மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்படும் படங்களை அதிக ரசிகர்கள் பார்ப்பதால அந்த மாநில மொழிப் படங்களும், கலைஞர்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறார்கள்! இது பல ஆண்டுகளாக ஒரு சில மாநிலங்களில் இருந்து வரும் சர்ச்சைக்குரிய விஷயம்!

அண்மை காலமாக இந்த விஷயத்தில் கர்நாடக திரையுலகம் பெரும் பாதிப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா திரையுலகினர் பல அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது! கர்நாடகாவில் பிறமொழிப் படங்களை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடக் கூடாது என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்று பெங்களூருவில் கன்னட திரையுலகினர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் கன்னட திரையுலகின் பெரும்பாலான கலைஞர்கள் கலந்துகொள்ள, இவர்களுடன் சில கன்னட அமைப்பினரும் கலந்துகொண்டனர். இதனால் பெங்களூருவில் நேற்று பல இடங்களில் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இந்தப் பேரணியை முன்னிட்டி நேற்று கர்நாடகாவில் எந்தப் படத்தின் வேலைகளும் நடைபெறவில்லை!

ஒரு சில கன்னட தயாரிப்பாளர்கள் பிறமொழிப் படங்களை டப்பிங் செய்து வெளியிடுவதற்கு ஆதரவு தெரிவித்து, அப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்ததால் அந்த நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு

இப்போது அந்த வழக்கும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கன்னட திரையுலகினர் தற்போது வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது தக்க முடிவு எடுக்காவிட்டால் மேற்கொண்டு பல போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் கன்னட திரையுலகினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;