தாவணிக்கு மாறிய நயன்தாரா!

தாவணிக்கு மாறிய நயன்தாரா!

செய்திகள் 28-Jan-2014 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துவரும் நயன்தாரா, இந்தப் படத்தில் வரும் ‘பல்லாக்கு தேவதை’ என்ற பாடலுக்காக தாவணி, பாவாடையில் நடித்து அசத்தியிருக்கிறாராம்! ஹாரிஸின் இசையில் சமீபத்தில் படமாக்கப்பட்ட இந்த தெம்மாங்கு பாடலுக்கு தாவணியில் கலக்கலாக ஆடிய நயன்தாராவைப் பார்த்து யூனிட்டே வாய்பிளந்து நின்றதாம்! படப்பிடிப்பு முடிந்ததும் இப்பாடலை மானிட்டரில் பார்த்த நயன்தாராவும், ‘என்னை பழைய மாதிரி காட்டியதற்காக ரொம்பவும் நன்றி’ என இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனைப் பார்த்து மகிழ்ச்சியோடு தெரிவித்தாராம்.

மீண்டும் தமிழ் சினிமாவில் களமிறங்கி, கடந்த வருடம் ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களில் சுடிதாரிலும், மாடர்ன் டிரெஸ்ஸிலும் நடித்திருந்த நயன்தாராவை, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் தாவணியோடு பார்க்க ரசிகர்களும் இப்போதே ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;