விஜய் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோ!

விஜய் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோ!

செய்திகள் 28-Jan-2014 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே நடிகர் விஜய் குடும்பத்திலிருந்து நடிக்க வந்த விக்ராந்த் தமிழ்சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது ‘இளையதளபதி’யின் குடும்பத்திலிருந்து இன்னொரு வாரிசு கிளம்பி இருக்கிறது. நடிகர் விஜய்யின் மாமாவும், பிரபல பாடகர் மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுமான எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ்தான் அந்தப் புதுமுகம்.

இவர் ஏற்கெனவே ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் அம்பியின் சின்ன வயது கேரக்டரில் நடித்திருக்கிறார். நட்பை மையமாக வைத்து தற்போது உருவாகும் ‘மொழிவது யாதெனில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விராஜ். இவரின் அப்பா சுரேந்தர், விஜய்யின் அம்மா ஷோபாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;