அனுஷ்காவின் பிரம்மாண்ட அரண்மனை!

அனுஷ்காவின் பிரம்மாண்ட அரண்மனை!

செய்திகள் 28-Jan-2014 9:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராணி வேடத்தில் அனுஷ்கா, கூடவே ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், சுமன், ஜெயப்பிரகாஷ் ரெட்டி, ஆதித்யாமேனன், விஜய்குமார், வேணுயாதவ் என ஏகப்பட்ட நட்சத்திரப் பிரபலங்கள், இளையராஜாவின் இசை ராஜாங்கம் என மிகப்பிரம்மாண்டமாக தெலுங்கில் வளர்ந்து வரும் ‘ருத்ரமாதேவி’ படத்திற்காக மிகப்பெரிய அரண்மனை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஐதாராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவில் இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரவு பகலாக வேலை செய்துள்ளார்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியின் டீம். இந்த பிரம்மாண்டமான அரண்மனையில் நாளைமுதல் ஆரம்பித்து வரும் பிப்ரவரி 20ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.

ருத்ராமாதேவி மகாராணியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படை வைத்து உருவாக்கப்படும் இப்படத்திற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரையேற்றம் என பல பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறாராம். 3டியில் உருவாகும் முதல் சரித்திரப் படம் என்ற பெருமையோடு உருவாகி வரும் இப்படத்தை குணசேகர் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;