மாதுரிக்கு வில்லியாகும் ஜூஹி சாவ்லா!

மாதுரிக்கு வில்லியாகும் ஜூஹி சாவ்லா!

செய்திகள் 27-Jan-2014 4:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரோஜா பூவின் அழகியல், அதன் முள்ளில் இருக்கும் கூர்மை இதுபோன்ற இரண்டு குணாதிசயங்கள் கலந்த பெண்கள் பற்றி சித்தரிக்கும் ஹிந்தி படம் ‘குலாப் கேங்’. உலக மகளிர் தினத்தை (மார்ச் 8-ஆம் தேதி) முன்னிட்டு மார்ச் 7-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா நடித்திருக்கிறார்கள். கதையின் நாயகியாகவும், வில்லியாகவும் பெண்கள் நடிக்கும் இப்படம் மகளிர் தினத்தையொட்டி ரிலீசாவதில் பல விசேஷங்கள் உண்டாம்!

நடிப்பு, நடனம் ஆகியவற்றில் தலைசிறந்தவரான மாதுரி தீட்சித் இந்தப் படத்தில் ஆக்‌ஷனிலும் அசத்தியிருக்கிறாராம். இதுவரை மாதுரியுடன் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்காத ஜூஹி சாவ்லா, ‘குலாப் கேங்’ படத்தில் நடித்தது குறித்து இப்படி கூறுகிறார். ‘‘இந்தப் படத்தில் என்னை நடிக்கத் தூண்டியது படத்தின் திரைக்கதைதான்! இதுபோன்ற கதைகள் படமாக உருவாகுவது, இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிதான விஷயம். இந்தப் படத்தில் நான் ஏற்று நடித்துள்ள கேரக்டர் என் வாழ்நாளில் மறக்க முடியாத கேரக்டர்’’ என்கிறார்.

உத்திரபிரதேசத்துக்கும், மத்திய பிரதேசத்துக்கும் இடையில் இருக்கும், ‘பண்டல் கட்’டில் உள்ள சில பெண் போராளிகளை பற்றிய இந்தப் படத்தில் மாதுரி தீட்சித் போராளியாக நடிக்க, அரசியல் தலைவியாக ஜூஹி சாவ்லா நடிக்கிறார். பிங்க் நிற புடவை கட்டிக்கொண்டு நியாயத்துக்காக போராடும் பெண்கள் பற்றிய கதை என்பதால் படத்திற்கு ‘குலாப் கேங்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

’ஏக் தோ தீன்….’ (தே சாப்), ‘சோலி கே பீச்சே க்யாஹே…’ (கல் நாயக்), ‘மார் டாலா…’ (தேவதாஸ்) போன்ற பாடல் காட்சிகளில் பார்த்த மாதுரியை இனி பார்க்க முடியாதா என்று யாரும் ஏங்க வேண்டாமாம்! அந்தப் பாடல்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இப்படத்தில் மாதுரியின் ஒரு கலக்கல் - ஹை வோல்டேஜ் நடனம் ஒன்று உண்டாம்!

அறிமுகம் சௌமிக் சென் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார். ’ரா ஒன்’ பட புகழ் இயக்குனர் அனுபவ் சின்ஹா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;