நடிக்க வரும் நாசரின் மகன்!

நடிக்க வரும் நாசரின் மகன்!

செய்திகள் 27-Jan-2014 2:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சைவம்' என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் விஜய், படத்தின் தலைப்புக்கு மெனக்கெட்டதை போலவே தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயரை சூட்டவும் மெனக்கெட்டுள்ளார். . பல்வேறு பெயர்களை பரிசீலித்தப் பிறகு, கடைசியில் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் இட்டு உள்ளார். ‘Guddu’ என்று செல்லமாக அழைக்கப்படும் ' பாஷா' அறிமுக படத்திலேயே இயக்குனரிடம் பாராட்டு வாங்கியிருக்கிறார்.

‘‘என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும் . அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் மட்டுமல்ல, அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர். என்னுடைய ‘சைவம்’ படத்திலும் அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் .அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும்போது , எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்தித்தேன். அச்சு அசலாக அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் அவர். நடிக்க மறுத்தவரை பெற்றோரின் சம்மதத்தோடு நடிக்க வைத்துள்ளேன். அவரை கேமராவில் பார்த்தபோது ‘நாயகன் ' பட நாசர் நினைவுக்கு வந்தார். அவரது தோற்ற பொலிவு ஒரு புறம் இருக்க, அவரது திறமையும் , கண்ணியமும் என்னை மிகவும் கவர்ந்தது. இதற்கான பெருமையில் அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்குண்டு! கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலப்படுகிறது’’ என்கிறார் நாசரின் மகன் பாஷா குறித்து இயக்குனர் விஜய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;