தனுஷின் 4 கெட்-அப்!

தனுஷின் 4 கெட்-அப்!

செய்திகள் 27-Jan-2014 2:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷ் மாறுபட்ட நான்கு வேடங்களில் நடிக்கிறார் என்ற செய்தியை நாம் முன்னே வெளியிட்டிருந்தோம்! தனுஷ் நடிக்கும் அந்த நான்கு கேரக்டர்கள் என்னென்ன என்பது இப்போது தெரிய வந்துள்ளது. சுருட்டை முடியுடன் நவநாகரீக இளைஞனாக ஒரு கேரக்டர் என்றால், புரூசிலியை போன்று மற்றொரு கேரக்டர்! மூன்றாவது கேரக்டர், ’குட்டி’யை போன்ற க்யூட் கெட்-அப்! காசிமேடு பின்னணியில் வரும் நான்காவது சர்ப்ரைஸ் கேரக்டர் தான் ஹைலைட்டான கேரக்டராம்!

தனுஷ் இப்படி என்றால் நடிகர் கார்த்திக், ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’ படங்களில் அஜித் வருவது மாதிரியான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வருகிறாராம்! ஆக, மாறுபட்ட ஒரு படத்தை தர இருக்கிறார் கே.வி.ஆனந்த் என்று நம்பலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;