கமல்ஹாசன் உருக்கம்!

கமல்ஹாசன் உருக்கம்!

செய்திகள் 27-Jan-2014 11:00 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி இருப்பதையொட்டி அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,

வணக்கம்,

‘‘பல்துறைகளிலும் திறமை செழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷன் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேராக நான் கருதுகிறேன். அரசுக்கு நன்றி. தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்துக்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு. நன்றி அன்பிறகு. பத்மபூஷன் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முக்கியமாக என் நண்பர் வைரமுத்து அவர்களுக்கு…’’ இப்படி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!

பத்மபூஷன் விருது கிடைத்ததை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ‘‘இந்த விருதை எனக்கு கற்றுக் கொடுத்தவர்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். சிலரிடம் நான் சம்பளம் கொடுத்து கற்றுக்கொண்டேன், சிலர் எனக்கு சம்பளம் தந்து கற்றுக் கொடுத்தார்கள். சண்முகம் அண்ணாச்சி, கே.பாலச்சந்தர் ஆகிய இருவரும் எனக்கு சம்பளம் தந்து கற்றுக் கொடுத்தவர்கள். இது மறக்க முடியாத நன்றி கடன்! தீர்க்க முடியாத நன்றி கடன்!’’ என்று உருக்கமாக கூறியுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தூங்காவனம் - மேக்கிங் வீடியோ


;