’பத்ம’ விருதுகள் பெற்ற பிரபலங்கள்!

’பத்ம’ விருதுகள் பெற்ற பிரபலங்கள்!

செய்திகள் 27-Jan-2014 10:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல்வேறு துறைகளிலாக சிறப்பாக பணி புரிந்து வருபவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று முன் தினம் மத்திய ஆரசு அறிவித்தது. இதில் பாரத ரத்னா விருதுக்கு அடுத்த படியாக மதிக்கப்படும் பத்மவிபூஷன் விருதுக்கு 2 பேரும், பத்மபூஷன் விருதுக்கு 24 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 101 பேரும் என மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் படி கலைத்துறையில், குறிப்பாக சினிமா துறையில் அரிய சேவை செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு பதம்பூஷன் விருதும், பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் பரேஷ ராவல், டைரக்டர் - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

விருதுக்கு தேர்வாகியுள்ள அத்தனை பேருக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;