விஜய் ஆன்டனியின் ‘டபுள் டிராக்’ புதுமை!

விஜய் ஆன்டனியின் ‘டபுள் டிராக்’ புதுமை!

செய்திகள் 25-Jan-2014 3:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நான்’ படத்திற்குப் பிறகு விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் படம்,‘சலீம்’. நிர்மல் குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா பர்தாசினி நடிக்க, படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. படத்தின் பாடல்களின் முன்னோட்டமாக சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டு அசத்துவது வழக்கம்! ஆனால் ‘சலீம்’ படத்திற்கு இசை அமைத்திருக்கும் விஜய் ஆன்டனி இப்படத்தின் இரண்டு பாடல்களை நாளை ஒரே நேரத்தில் வெளியிட்டு புதுமை படைக்க இருக்கிறார்.

அதில் ஒரு பாடல், ‘அவளை நம்பித் தான் நாசமாயிட்டேன்… மோசம்போயிட்டேன்..’ என்று துவங்கும் பாடல்! இன்னொன்று ரஜினி - கமல் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் ‘சம்போ சிவ சம்போ…’ பாடலின் ரீ-மிக்ஸ் தீம் சாங்! சரிகம நிறுவனம் வெளியிடும் ‘சலீம்’ படத்தின் இந்த இரண்டு பாடல்களை நாளை (26-1-14) முதல் ரசிகர்கள் கேட்டு ரசிக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;