நேர் எதிர்

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் வாசகர்கள் நீங்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும்!

விமர்சனம் 25-Jan-2014 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.தாணு தயாரித்து, எம்.ஜெயபிரதீப் இயக்கியுள்ள கிரைம் த்ரில்லர் ‘நேர் எதிர்’. கதிர் (பார்த்தி), கார்த்தி (ரிச்சர்ட்), இஷா (வித்யா), நேத்ரா (ஐஸ்வர்யா), நீராவி (எம்.எஸ்.பாஸ்கர்) இந்த ஐந்து பேர்களுக்கிடையே நடக்கும் ஒரு கொலை சம்பவம்தான் படத்தின் திரைக்கதை..

அறிமுக நடிகர் பார்த்தி, ரிச்சர்ட் இரண்டு பேரும் நெருங்கிய நண்பரகள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் எதுவும் செய்வதில்லை. ரிச்சர்ட்க்கு அனைத்து பழக்கங்களும் உண்டு. பார்த்தி தண்ணி அடிப்பதுடன் சரி.

பார்த்திக்கு தனது காதலி வித்யாவுடன் நிச்சயமாகிறது. விரைவில் கல்யாணம் என்ற நிலையில் வித்யா சிட்டியில் இருக்கும் பலான ஹோட்டலுக்கு போகிறாள். அந்த ஹோட்டலில் மணிக்கணக்கு, நாள் கணக்கில் ரூம் எடுத்து தங்குபவர்கள் தான் அதிகம் பேர். இதனால் அப்செட் ஆகும் பார்த்தி தனது காதலி வித்யாவை ஃபாலோ செய்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு எதிரிலேயே ரூம் போடுகிறார், ஹோட்டல் பணியாளர் எம்.எஸ்.பாஸ்கரை அட்ஜெஸ்ட் செய்து! பார்த்தி டோர் லென்ஸ் வியூ மூலம் வித்யா ரூமில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

வித்யா தப்பான நோக்கில் தான் ரூம் எடுத்துள்ளார் என்பதை அறியும் அவர் கொலைவெறியுடன் தனது நண்பன் ரிச்சர்டை ஃபோன் மூலம் ரூமிற்கு வரச்சொல்கிறார். அங்கு வந்தவுடன் திரைகதை சூடு பிடிக்கிறது. அதே சமயம் ரிச்சர்டின் காதலி ஐஸ்வர்யாவும் அதே ஹோட்டலுக்கு வருகிறார். இங்கிருந்து ஆரம்பமாகிறது படத்தோட டிவிஸ்ட்! யாருடன் வித்யா வந்தார்? பார்த்தி எதை பார்த்தார்? ரிச்சர்ட் வந்து என்ன செய்தார்? ஐஸ்வர்யா ஏன் வந்தார்? இவர்களுக்குள் என்ன நடந்தது? என்பதை கடைசி வரை யூகிக்க முடியாமல் கொண்டு சென்ற இயக்குனர் பாராட்டு பெறுகிறார்! வெறும் 5 கேரக்டர்களை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். அதே சமயம் திரைக்கதையில் சில ஓட்டைகளும் உள்ளன! ராசாமதியின் ஒளிப்பதிவை பாராட்டலாம்! படம் கிட்டத்தட்ட இரவு நேரங்களிலேயே எடுக்கப்பட்டுள்ளது.

கிரைம் படத்திற்கான சரியான ஒளிப்பதிவு. எடிட்டர் கோபிகிருஷ்ணாவின் பங்களிப்பும் பாராட்டும்படியாக இருக்கிறது. இசை சதீஷ் சக்கரவர்த்தி - நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் ஹாலிவுட் படங்களின் இசையை கேட்ட உணர்வை தருகிறது! பார்த்தி பேசும் வசனங்கள் ஒரு சில இடங்களில் பொருந்தவில்லை. படத்தின் மொத்த நீளம் ஒரு மணி நாற்பது நிமிடங்கள் என்றாலும் சில இடங்களில் நகர முடியாமல் தவிக்கிறது. கணக்கு போடும் காமெடி காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் வாசகர்கள் நீங்கள் என்றால் இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும். வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;