விவசாயியாக மாறிய கவுண்டர்!

விவசாயியாக மாறிய கவுண்டர்!

செய்திகள் 25-Jan-2014 10:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரை உலக நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அபரிமிதமான பிரியத்துக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு! சமீபத்திய ஒரு சம்பவம், ஒரு மாஸ் ஹீரோ சம்மந்தப்பட்டதோ, அல்லது அழகான இளம் நாயகி சம்மந்தப்பட்டதோ அல்ல! திரை உலகில் அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை கவர்ந்த கவுண்டமணி நடிக்கும் ‘49 ஒ’ படப்பிடிப்பின்போது நடைபெற்ற ஒரு சுவராசியமான சம்பவம்தான்!!!
<
ஓரத்த நாட்டில் இருந்து தஞ்சை நோக்கி போய் கொண்டிருந்த ஒரு பேருந்து, வயல் வெளியில் படப்பிடிப்பு நடப்பதையும், அதில் கவுண்ட மணி நடித்துக் கொண்டு இருப்பதையும் பார்த்து அதிலிருந்த பயணிகள் பேருந்து ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்தச் சொல்லி, படப்பிடிப்பு நடத்தும் வயல் வெளிக்கு செல்ல முற்பட்டனர் . கவுண்டமணி உண்மையிலே விவசாயியாக மாறி விட்டாரோ என்று தங்களுக்குள் விவாதித்து கொண்டு சென்றபோது, அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! யாரை பற்றி பேசி கொண்டு இருந்தார்களோ அந்த கவுண்டர் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தார்! அத்துடன் வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்ததோடு அவரது பாணியில் நகையாடவும் செய்தார். இருளையும் மீறி காற்றில் அங்கு இருந்தோரின் சிரிப்பு சத்தம் கீற்று போல் பரவியது . மீண்டும் பேருந்து பயணத்தை துவங்கிய போது அவர்களின் கருத்து 'வயசானாலும் கவுண்டரின் நையாண்டி உணர்வு சற்றும் குறையவில்லை’ என்பது தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போங்கு - டிரைலர்


;