நஸ்ரியாவுக்கு ஃபஹத்திடம் பிடித்த விஷயங்கள்!

நஸ்ரியாவுக்கு ஃபஹத்திடம் பிடித்த விஷயங்கள்!

செய்திகள் 24-Jan-2014 3:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், மலையாள சினிமா ரசிகர்களின் இதயங்களில் சமீபத்திய கனவு தேவதையாக திகழ்ந்து வந்தவர் நஸ்ரியா நசீம்! குறுகிய காலத்தில் ஜெட்வேக வளர்ச்சி பெற்று, சில சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்ட நஸ்ரியா, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்ய இருக்கிறார்! இவர்களது திருமணம் குறித்த செய்திகள் தான் கோலிவுட் மற்றும் மோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்!

இப்படி திடீரென்று திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள நஸ்ரியாவை சமீபத்தில் நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவரிடம், ‘‘ஃபஹத் ஃபாசிலிடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த விஷ்யங்கள் என்ன?’’ என்று கேட்டோம்!

அதற்கு நஸ்ரியா பதிலளிக்கையில், “ஃபஹத் ரொமபவும் எளிமையானவர், ஆத்மார்த்தமாக பழகக் கூடியவர்! குடும்பப் பாசம் மிக்கவர். அவரோட அந்த குணங்கள் என்னை ரொம்பவும் கவர்ந்தது’’ என்றார்! தொடர்ந்து அவரிடம், ‘‘திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா?’’ என்று கேட்க,

‘‘நான் இதுவரை கமிட்டாகியுள்ள எல்லா படங்களையும் நடித்து முடித்து கொடுத்தப் பிறகே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது’’ என்றார்! அத்துடன், ‘‘எனக்கும் என் குடும்பத்தினருக்கும் நன்றாக தெரிந்த ஒரு சினிமா குடும்பத்தில் ஒரு அங்கமாக போவதை நினைக்கும்போது ரொம்பவும் ஹேப்பியாக இருக்கிறேன். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் நடக்கக் கூடிய ஒரு இனிய தருணம்! அந்த தருணம் என் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று நான் கனவில் கூட கண்டதில்லை! எல்லாம் இறைவன் செயல்’’ என்றார் ’அழகுப் புயல்’ நஸ்ரியா!

இவர் ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ள ’காதல் எனும் நிக்காஹ்’ படம் காதலர் தினமான ஃபிப்ரவரி 14- ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் தவிர பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ள ’வாயை மூடி பேசவும்’ வெளியாக இருக்கிறது. ஜீவா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார் நஸ்ரியா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;