சிவாஜி குடும்பத்தினர் வேண்டுகோள்!

சிவாஜி குடும்பத்தினர் வேண்டுகோள்!

செய்திகள் 24-Jan-2014 12:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை கடற்கரை சாலையில் உள்ள ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் சிலை சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று உயர் நீதி மன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து நடிகர் திலகத்தின் மகன்கள் ராம் குமாரும், பிரபுவும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

‘‘சென்னை கடற்கரை காமராஜ் சாலையில் இருக்கும் ‘நடிகர் திலகம்’ சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை அரசின் முடிவுக்கே விட்டிருக்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் இது சம்பந்தமாக எந்த போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ தற்போது செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். அதுவரை அமைதி காக்கும் படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதாகப்பட்டது மகாஜனங்களே - டிரைலர்


;