முழுக்க முழுக்க நைனிடாலில் படமான படம்!

முழுக்க முழுக்க நைனிடாலில் படமான படம்!

செய்திகள் 24-Jan-2014 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'விண்ணை தாண்டி வருவாயா' , 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', ' நீதானே என் பொன் வசந்தம்' ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஜீவா நடிப்பில் பிரபல ஒளிபதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கி வரும் 'யான்' படத்தை தயாரிக்கிறது ‘ ஆர்.எஸ்.இன்ஃபோடைய்ன்மென்ட் ’ நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் ‘ யான்’ படத்தை தொடர்ந்து தயாரிக்கும் படத்திற்கு, ' யாமிருக்க பயமே' என்று பெயர் வைத்துள்ளனர். ஏற்கெனவே ‘இல்ல ஆனா இருக்கு’ என்ற பெயரில் துவங்கப்பட்ட படமே இப்போது ’யாமிருக்க பயமே’ என்று பெயர் மாறியுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்திற்கு காரணம் கிட்டத்தட்ட இதே மாதிரியான பெயரில் மற்றொரு படமும் தயாரிப்பில் இருப்பதே!

'பயம் ' என்ற ஒரு வார்த்தையை உள்ளடக்கி ஏராளமான அர்த்தங்களை மையமாக கொண்டு எடுக்க பட்டு வரும் படம் இது. இயக்குனர் கே.வி. ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய டீ. கே இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி,ஆதவ் கண்ணதாசன் , கருணா மற்றும் ஓவியா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இப்படம் இந்த வருடம் வெளி வர இருக்கும் படங்களில் மிக முக்கிய படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;