ஹேப்பி பர்த்டே இமான்!

ஹேப்பி பர்த்டே இமான்!

செய்திகள் 24-Jan-2014 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடித்த, ‘தமிழன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் டி.இமான். அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் நடித்த படங்களுக்கு இசை அமைத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசை அமைப்பாளராகி இருக்கிறார் இமான்.

இது வரை 50 படங்களுக்கும் மேல் இசை அமைத்துள்ள இமான் கைவசம இப்போது எக்கச்சக்க படங்கள்! இருந்தாலும் பெரிய நடிகர்கள் - சின்ன நடிகர்கள், பெரிய இயக்குனர்கள் – அறிமுக இயக்குனர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் இனிய இசையை கொடுத்து வரும் இமானின் இசையில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’ஜில்லா’.

இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்து வரும் இவ்வேளையில் டி.இமானுக்கு இன்று பிறந்த நாள்! இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;