விதார்த், சூரியின் வித்தியாசமான டிரைலர்!

விதார்த், சூரியின் வித்தியாசமான டிரைலர்!

செய்திகள் 23-Jan-2014 5:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விதார்த், மனீஷா யாதவ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’. பிரபு நடித்த ‘பொன்மனம்’, விஜய் நடித்த ‘சுறா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். இன்று காலை ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தின் ஆடியோ சிடியை வெளியிட, அதனை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார். இயக்குனர் விக்ரமன் டிரைலர் சிடியை வெளியிட, நடிகர் சங்க செயலாளர் ராதாரவி பெற்றுக் கொண்டார்.

முன்னதாக விழாவில் ‘பட்டைய கௌப்பணும் பாண்டியா’ படத்திலிருந்து மூன்று பாடல்கள் ஒலிபரப்பட்டன. பின்னர் படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது. இப்படத்தின் டிரைலர் வித்தியாசமான முறையில், அதாவது படத்திலுள்ள ஒரு முழு காமெடிக் காட்சியையும் எந்தவித கட்டும் இல்லாமல் முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. விதார்த்தும், சூரியும் காமெடி செய்திருந்த இந்த டிரைலருக்கு அரங்கத்தில் பலத்த சிரிப்பொலி உண்டானது. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;