சிவாஜி சிலை அகற்ற உத்தரவு!

சிவாஜி சிலை அகற்ற உத்தரவு!

செய்திகள் 23-Jan-2014 4:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை கடற்கரை சாலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. ஆனால், இச்சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து சிலையை அகற்ற வேண்டும் என பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதோடு சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்து சிலையை வேறு இடத்துக்கு மாற்றலாம் என போக்குவரத்துக் காவல் துறை சார்பிலும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சிலையை அகற்றக்கூடாது என சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன், தமிழ்ச் சங்கப் பலகை தலைவர் தஞ்சை தமிழ்ப்பித்தன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதாகப்பட்டது மகாஜனங்களே - டிரைலர்


;